குறள் 581 : ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்


மு . வ . உரை : ஒற்றரும் புகழ் அமைந்த நீதி நூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேண்டும்